தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவனின் சகோதரரும், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான இனியன் சம்பத் (72) புற்றுநோய் பாதிப்பால் நேற்று (ஜன.10) காலமானார். தந்தை பெரியாரின் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த இவர், காங்கிரஸ் பேரியக்கத்தில் நீண்ட காலம் தீவிரமாக பணியாற்றியதோடு தனித்துவமான அரசியல் ஆளுமையாக திகழ்ந்தவர். சென்னை திருவான்மியூரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.