மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் கைது செய்யப்பட்டதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பெண் யூடியூபர் பற்றி பேசியதாக 8 மாதங்களுக்கு முன்பு அளிக்கப்பட்ட புகாரில், முன் விசாரணையின்றி நேரடியாக கைது செய்தது ஏன் என கேள்வியெழுப்பியுள்ளது. இந்த கைது நடவடிக்கை அரசின் பழிவாங்கும் நடவடிக்கையா என்றும் சந்தேகம் எழுப்பி, அவரை உடனடியாக
விடுதலை செய்ய வலியுறுத்தியுள்ளது. தாமோதரன் பிரகாஷ், நக்கீரன் புலனாய்வு இதழில் மூத்த செய்தியாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.