தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020ம் ஆண்டில் போலீசார் தாக்கியதில் படுகாயம் அடைந்து அடுத்தடுத்து இறந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. வரும் திங்களன்று தண்டனை அறிவிக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், “இந்த வழக்கில் கைதான 9 போலீசாருக்கும் பாரபட்சம் பார்க்காமல் அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும்” என மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் மத்திய அரசு கூறி இருக்கிறது.