அமெரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு.. 6 பேர் பலி

29பார்த்தது
அமெரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு.. 6 பேர் பலி
அமெரிக்காவின் கிழக்கு மிசிசிப்பி மற்றும் அலபாமா எல்லைக்கு அருகிலுள்ள வெஸ்ட் பாயிண்ட் பகுதியில், கடந்த 9-ம் தேதி 3 வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக டரிக்கா எம். மூர் (24) என்ற இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களில் குற்றவாளியின் தந்தை, சகோதரன் மற்றும் ஒரு 7 வயது சிறுமி உட்பட உறவினர்களும் அடங்குவர் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி