அமெரிக்க இடைக்கால தேர்தலில் அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி பின்னடைவை சந்தித்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் அதிகாரமும் கைநழுவியுள்ளது. இந்நிலையில், அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் "VETO" என பொறிக்கப்பட்ட தொப்பியின் புகைப்படத்தை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இனி நாடாளுமன்றத்தின் சட்டங்களை முடக்க குடியரசு தலைவருக்கான சிறப்பு 'வீட்டோ' அதிகாரத்தையே டிரம்ப் அதிகம் பயன்படுத்துவார் என்பதை இப்புகைப்படம் உணர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.