திருமணம் செய்வதாக உறுதியளித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மனு தொடர்பான விசாரணையில், உச்ச நீதிமன்றம் முக்கியக் கருத்து தெரிவித்துள்ளது. திருமணத்திற்கு முன் யாரையும் முழுமையாக நம்பாமல், பெண்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும், தற்போதைய தலைமுறையினர் திருமணத்திற்கு முன் உறவில் ஈடுபடும் நடைமுறையைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.