புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தவெக அரசால் அறிவிக்கப்பட்ட 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' பெயரளவிலேயே இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.