சென்னை புழல் செகரடேரியட் காலனி பகுதியில் நேற்று (நவ.22) இரவு தனியாக நடந்து சென்ற இளம்பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து இளம்பெண் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் விரைந்து விசாரணை நடத்தினர். பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அந்த நபர் ஒரு 15 வயது சிறுவன் என்பதும், 10-ம் வகுப்பு படித்து வருபவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.