பாலியல் கொலை குற்றவாளி மதுரை சிறைக்கு மாற்றம்

6361பார்த்தது
பாலியல் கொலை குற்றவாளி மதுரை சிறைக்கு மாற்றம்
தூத்துக்குடி விளாத்திகுளம் 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான குற்றவாளி மதுரை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் கைதான தர்ம முனீஸ்வரனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட நிலையில், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதனிடையே பாதுகாப்பு தொடர்பாக மதுரை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். நேற்றைய தினம் மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொண்டு இறுதிச் சடங்கு செய்தது குறிப்பிடத்தக்கது.