சென்னையில் நள்ளிரவில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை, தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் துடைப்பத்தால் வெளுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (நவ.9) நள்ளிரவில், சென்னை அடையாறு பகுதியில் பெண் ஒருவர் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற நபர், பெண்ணிடம் அத்துமீறி, பாலியல் ரீதியாக பேசியதாக தெரிகிறது. இதனால் கடுப்பான அப்பெண், கையில் வைத்திருந்த துடைப்பத்தால் அடித்து வெளுத்துள்ளார்.