மும்பை: கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் தனது பிறந்தநாளன்று ரசிகர்களை சந்திக்க முடியாமல் போனதற்கு நடிகர் ஷாருக்கான் மன்னிப்புக் கோரியுள்ளார். நடிகர் ஷாருக்கான் இன்று (நவ.02) தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் அவரது வீட்டில் திரண்டனர். ஆனால், அவர்களை ஷாருக்கான் சந்திக்கவில்லை. இதுகுறித்து அவர் கூறுகையில், “நெரிசல் கட்டுப்பாட்டுப் பிரச்சனைகள் காரணமாகவும் அனைவரது ஒட்டுமொத்த பாதுகாப்பிற்காகவும் சந்திக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.