காரைக்கால், திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோயிலில், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, 2026 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி, மாசி மாதம் 22 ஆம் தேதி அன்று காலை 8.24 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. அன்றைய தினம் சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கிறார். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர். அன்றைய தினம் சிறப்பு பரிகாரங்கள் செய்து பக்தர்கள் வழிபாடு மேற்கொள்ளலாம்.