காரைக்கால் திருநள்ளாறில் உள்ள பிரணம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6ஆம் தேதி நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி விழாவிற்கான பந்தல்கால் முகூர்த்த விழா நேற்று (பிப்., 11) வெகு விமரிசையாக நடைபெற்றது. அன்று காலை 8.24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கிறார். இதையொட்டி, கோயிலில் கொடி மர விநாயகர் மற்றும் பந்தல்கால்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.