வெள்ளத்தில் நீந்திய சுறா: அதிர்ச்சியில் மக்கள்

2639பார்த்தது
அமெரிக்காவின் நியூ ஜெர்சி உள்ளிட்ட வடகிழக்கு மாகாணங்களை கடந்த 26ஆம் தேதி நார்ஈஸ்டர் புயல் தாக்கியது. மணிக்கு 70 மைல் வேகத்தில் வீசிய காற்று மற்றும் கனமழையால் நியூ ஜெர்சியின் சர்ப் சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பெரும் பொருள் சேதமும், உயிரிழப்பும் நிகழ்ந்தன. சர்ப் சிட்டியில் வசிக்கும் ட்ரூ ப்ரோகாசினோ, தனது வீட்டு வாசலில் சுமார் 4 அடி உயரத்திற்கு சூழ்ந்திருந்த வெள்ள நீரில் ஒரு சிறிய சுறா மீன் நீந்திச் செல்வதைக் கண்டு அதை வீடியோவாகப் பதிவு செய்தார்.

தொடர்புடைய செய்தி