கேரளாவில் கடந்த 2020-க்குப் பின் தற்போது வயநாடு, கோழிக்கோடு உட்பட பல மாவட்டங்களில் 'ஷிகெல்லா' பாக்டீரியா நோய்த்தொற்று மீண்டும் பரவி வருகிறது. வயநாட்டில் பள்ளி கிணற்று நீரில் இந்த பாக்டீரியா கண்டறியப்பட்டதை அடுத்து, 16 குழந்தைகள் பாதிக்கப்பட்டுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 126-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரத்த வயிற்றுப்போக்கு, காய்ச்சல் இருந்தால் உடனே சிகிச்சைப் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.