முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், தனது காதலியான அயர்லாந்தை சேர்ந்த சோபி ஷைனை 2-வதாக டெல்லியில் இன்று (பிப்.22) திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண விழாவில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பல கிரிக்கெட் நட்சத்திரங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்ற இத்திருமணத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.