நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து CNG விலையும் ரூ.2 உயர்த்தப்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் 1 லிட்டர் CNG ரூ.93.50-க்கு விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வு காரணமாக ஆட்டோ கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான ஆட்டோக்கள் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக CNG எரிவாயுவை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.