அல்வா பிரியர்களுக்கு அதிர்ச்சி: சிலிண்டர் தட்டுப்பாட்டால் தயாரிப்பு நிறுத்தம்

3420பார்த்தது
நெல்லை மாவட்டத்தின் பாரம்பரியம் மிக்க பிரபல அல்வா கடையான சாந்தி சுவீட்ஸ், போதிய சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைக்காத காரணத்தால் அல்வா தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், நாளை (மார்ச் 25) முதல் கடையில் அல்வா விற்பனை இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையின் அடையாளமாக திகழும் இந்த உணவின் விற்பனை நிறுத்தப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி:News18
Job Suitcase

Jobs near you