SBI வங்கி வரும் பிப்.15 முதல் ஆன்லைன் IMPS பண பரிமாற்றங்களுக்குப் புதிய கட்டணங்களை அறிமுகப்படுத்துகிறது. இதுவரை இலவசமாக இருந்த இச்சேவையில், இனி ரூ.25,000-க்கு மேல் அனுப்பப்படும் பணத்திற்கு ரூ.2 முதல் ரூ.10 வரை (கூடுதல் ஜிஎஸ்டி) கட்டணம் வசூலிக்கப்படும். குறிப்பாக யோனோ ஆப் மற்றும் நெட் பேங்கிங் மூலம் ரூ.5 லட்சம் வரை அனுப்பும் வாடிக்கையாளர்களுக்கு இது பொருந்தும். இருப்பினும், வங்கி கிளைகளுக்கு நேரடியாக சென்று பணம் அனுப்பும் பழைய கட்டண முறையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.