ஜியோ, ஏர்டெல், வி.ஐ. போன்ற தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் டிசம்பரில் ரீசார்ஜ் கட்டணங்களை 10–20% வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடிப்படை பிளான்களுக்கு 10% மற்றும் மற்ற பிளான்களுக்கு 20% உயர்வு இருக்கும். 5G சேவைகளின் பராமரிப்பு செலவு அதிகரித்ததால்தான் இத்திட்டம் என கூறப்படுகிறது. ஏற்கனவே வாடிக்கையாளர்கள் விலை உயர்வால் அதிருப்தியடைந்த நிலையில், இது மேலும் சுமையாக அமையும்.