உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வினீதா என்ற பெண், கடந்த பிப்.22 ஆம் தேதியன்று, வீட்டில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். பின்னர், அவரது உடல் வீட்டிற்கு எடுத்துவரப்பட்டு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டுள்ளது. அப்போது திடீரென அந்த பெண் எழுந்ததால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைக்குப் பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.