ஹரியாணாவில் மருத்துவமனை, வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: 3 இளைஞர்கள் கைது

66பார்த்தது
ஹரியாணாவில் மருத்துவமனை, வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: 3 இளைஞர்கள் கைது
ஹரியாணா மாநிலம் யமுனா நகரில், முகத்தை மூடிய நிலையில் தனியார் மருத்துவமனைக்குள் நுழைந்த மூன்று இளைஞர்கள் சனிக்கிழமை இரவு வரவேற்புப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். பின்னர் வணிக வளாகத்திலும் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு ஓடிவிட்டனர். ஞாயிற்றுக்கிழமை காலை இருச்சக்கர வாகனத்தில் சென்றபோது போலீஸாரால் சுற்றி வளைக்கப்பட்டனர். அப்போது போலீஸார் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி