செப்.1 முதல் படப்பிடிப்பு நிறுத்தம்? - அரசு தலையிட பெப்சி கோரிக்கை

2588பார்த்தது
செப்.1 முதல் படப்பிடிப்பு நிறுத்தம்? - அரசு தலையிட பெப்சி கோரிக்கை
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் போராட்டத்தால் வரும் செப்.1-ம் தேதி முதல் அனைத்து திரைப்பட பணிகளும் நிறுத்தப்பட்டால், அதை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ள திரை தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என பெப்சி அமைப்பின் தலைவர் செல்வமணி கவலை தெரிவித்துள்ளார். எனவே, திரைத்துறையில் உருவாகியுள்ள இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணும் வகையில், தமிழக அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.