தமிழகத்தில் பல்வேறு அரசு மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 1) மதுரை வருகை தருகிறார். இதனையொட்டி மதுரை மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, இன்று மாலை 4 மணியளவில் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில், பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்யவுள்ளார். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் கோயில் வளாகம், சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.