பொங்கல் சேலைக்கு தட்டுப்பாடு.. மக்கள் அதிருப்தி

14பார்த்தது
பொங்கல் சேலைக்கு தட்டுப்பாடு.. மக்கள் அதிருப்தி
தமிழகத்தில் பொங்கல் பரிசாக  பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, ரூ.3,000 ரொக்கம் ஆகியவை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இலவச வேஷ்டி, சேலைகள் வரும் 14ஆம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில ரேஷன் கடைகளில் இலவச வேஷ்டி, சேலைகள் போதிய அளவு இருப்பு இல்லை என்று கூறி வருவதாக மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். பொங்கல் முடிந்த பின் மீண்டும் வேட்டி, சேலைகள் அனுப்பி வைக்கப்பட்டால், வழங்கப்படும் என விற்பனையாளர்கள் தெரிவித்ததால் மக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

தொடர்புடைய செய்தி