தமிழக ரேஷன் கடைகளில் ஜூன் இரண்டாம் வாரம் வரை மட்டுமே துவரம் பருப்பு இருப்பு உள்ளதால், அதற்கு மேல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. பருப்புக்கான டெண்டரைத் தமிழக அரசு திடீரென ரத்து செய்ததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. வெளிச்சந்தையில் ரூ.150-க்கு விற்கும் பருப்பு, ரேஷனில் ரூ.30-க்கு வழங்கப்படுவதால், 2.26 கோடி அட்டைதாரர்களின் நலன் கருதி அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரியுள்ளனர்.