ஒரே நாடு ஒரே தேர்தல் வராது, அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இந்த மசோதாவின் மீது பாஜகவினரே வாக்களிக்க மாட்டார்கள் என்று கூறிய அவர், சட்டம் நிறைவேறினாலும் அதற்கு எதிராக தான் வழக்கு தொடர்வேன் என்றும் கூறியுள்ளார். மேலும், ஜிஎஸ்டியை அழிக்க வேண்டுமென்றும், நிதி அமைச்சருக்கு ஒன்றும் தெரியாமல் பிறர் எழுதித் தருவதை படிப்பதாகவும் சாடியுள்ளார்.