இந்திய அணி கேப்டன் சுப்மன் கில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், அடுத்த 5 நாட்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்சில் 3 பந்துகள் விளையாடிய கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக retd hurt ஆகி வெளியேறினார். பின்னர் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.