சிக்கிம் முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதி

2310பார்த்தது
சிக்கிம் முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதி
சிக்கிம் மாநில முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் (57) நேற்று (நவ., 13) திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவரது மூக்கில் இருந்து ரத்தம் வெளியேறியதுடன், ரத்த அழுத்தமும் அதிகரித்துள்ளது. இதையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், இன்று (நவ., 14) அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்தி