தமிழகத்தில் வெள்ளி விலை இன்று (மே 28) ஒரு கிலோவுக்கு ரூ.5,000 குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ ரூ.2,90,000-க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.285-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ.2,85,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 19ஆம் தேதி ஒரு கிலோ ரூ.3,00,000-க்கு விற்கப்பட்ட நிலையில், தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருந்தது. 10 நாட்களில் தற்போது ரூ.15,000 வரை குறைந்துள்ளது.