வெள்ளி விலை குறைந்து வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் சற்று ஆறுதலை அளித்து வருகிறது. கடந்த ஜன., 29ஆம் தேதி வரலாறு காணாத உச்சமாக ஒரு கிராம் ரூ.410-க்கும், ஒரு கிலோ ரூ.4 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனையானது. சர்வதேச பொருளாதார நிலையின்மை காரணமாக, தொடர்ந்து விலை குறைந்து வருகிறது. இதனிடையே இன்று (பிப்., 18) ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது. கடந்த 20 நாட்களில் ரூ.150 வரை குறைந்துள்ளது. ஒரு கிலோவுக்கு ரூ.1.50 லட்சம் குறைந்துள்ளது.