சமையல் அல்லது சாலட்களுக்குப் பயன்படுத்தப்பட்ட வெட்டப்பட்ட எலுமிச்சை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும்போது காய்ந்து சாறு குறையாமல் இருக்க, அலுமினியம் ஃபாயில், காற்று புகாத கொள்கலன்கள் அல்லது சிலிக்கான் மூடிகளைப் பயன்படுத்த நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். வெட்டப்பட்ட எலுமிச்சையை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும். பூஞ்சை, வழுவழுப்பு, நிறமாற்றம் அல்லது துர்நாற்றம் ஏற்பட்டால் பயன்படுத்தக் கூடாது. குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் முன் எலுமிச்சையின் வெளிப்புறம் உலர்ந்திருக்க வேண்டும்.