இசைப்பேரரசி எஸ். ஜானகியின் உடலுக்கு கர்நாடக அரசு முழு அரசு மரியாதை செலுத்தியது. மைசூர் அருகே உள்ள அவரது பண்ணைத் தோட்டத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் காவல்துறையினர் 30 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தினர். குடும்பத்தினர், திரையுலகினர்,
அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் அஞ்சலி செலுத்திய நிலையில், எச்.டி. கோட்டை சாலையில் உள்ள பண்ணை வீட்டில் ஜானகியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.