சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கக்கோரி நேற்று (ஜன.17) வரை 13 லட்சத்து 3,487 பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். முன்னதாக, இடம்பெயர்ந்தவர்கள் என 66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதேபோல், தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில் 13 லட்சம் பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். மேலும், பெயரை நீக்கக்கோரி 35,646 விண்ணப்பித்துள்ளனர்.