தேர்தல் ஆணையத்தின் SIR படிவத்தை நிரப்புவதில் சந்தேகம் ஏற்பட்டால், திமுக சார்பிலான உதவி எண்ணை (8065420020) தொடர்பு கொண்டு வழிகாட்டுதல்களை பெறலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, திருத்தம் செய்வது தொடர்பான இந்த படிவத்தை பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணை தொடர்பு கொண்டு, தேவைப்படும் விவரங்களையும், வழிகாட்டுதல்களையும் பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.