திமுக நிர்வாகி திருமண விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், SIR ஐ எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம் என கூறியுள்ளார். மேலும், "SIR பணிகள் தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது. அதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளோம். SIR படிவங்களில் அளிக்கும் பெயர்கள் மட்டும்தான் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் என்ற நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் வரும்போது நாம் வீட்டில் இல்லாமல் போய்விட்டால் வாக்குகளை இழக்கும் சூழல் ஏற்படும்" என கூறினார்.