வாக்கு திருட்டை மூடி மறைக்கவே தேர்தல் ஆணையத்தின் SIR பணிகள் நடைபெறுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய பிரதேசத்தில் இன்று (நவ.9) பேட்டியளித்த அவர், "ஹரியானா, பீகார் போன்றே மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் வாக்கு திருட்டு நடந்திருக்க வாய்ப்புள்ளது. வாக்கு திருட்டு தொடர்பாகத் தன்னிடம் விரிவான தகவல்கள் இருப்பதாகவும், அவற்றை படிப்படியாக வெளியிடுவோம்" என்று தெரிவித்துள்ளார்.