"வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) ஒன்றும் இடியாப்ப சிக்கல் இல்லை” என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (நவ.10) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "SIR என்பது இடியாப்ப சிக்கல் போலிருக்கிறது என்று சொல்கிறார்கள். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இட்லி போல் பிச்சி சாப்பிட வேண்டியது தான்" என்றார். மேலும், “என்னுடைய வீட்டிற்கு பிஎல்ஓ வந்தார். 2 நிமிடங்களில் படிவத்தை நிரப்பிக் கொடுத்துவிட்டேன்” என்றார்.