தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் பணிகள் முடிந்த நிலையில், விடுபட்ட ஆந்திரா, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வரும் ஏப்ரல் முதல் SIR பணிகள் தொடங்கப்படவுள்ளன. இதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபடுமாறு அந்தந்த மாநில அதிகாரிகளுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் பட்டியலை சரிபார்க்கவும், தேர்தல் நடைமுறைகளை முறைப்படுத்தவும் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.