அதிக நேரம் அமர்ந்து வேலை பார்ப்பவரா? மூளையின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து!

1பார்த்தது
அதிக நேரம் அமர்ந்து வேலை பார்ப்பவரா? மூளையின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து!
தொடர்ந்து பல மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது உடல் பருமன் மற்றும் இதய நோய்களை ஏற்படுத்துவது மட்டுமன்றி, மூளையின் நினைவாற்றல் பகுதியையும் பாதிப்பதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. நீண்ட நேரம் அசைவற்று இருக்கும்போது மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைந்து, மூளையின் செல்கள் சுருங்கும் அபாயம் ஏற்படுவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதிலிருந்து தப்பிக்க, ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் ஒருமுறை சிறிது நேரம் எழுந்து நடப்பதையும், எளிய உடற்பயிற்சிகளை செய்வதையும் வாடிக்கையாக்கி கொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்தி