சிவகங்கையில் நடந்த இரட்டைக் கொலையைக் கண்டித்து உடல்களை வாங்க மறுத்து 4 நாட்களாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, உயிரிழந்த பூப்பாண்டியின் சகோதரி பூமணி மற்றும் தெய்வேந்திரனின் தம்பி ராதாகிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் சுகாதாரத்துறையில் தற்காலிக ‘டெங்கு மஸ்தூர்’ பணிக்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டன. பணி ஆணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து உறவினர்கள் உடல்களைப் பெற்றுக்கொள்ள உடன்பட்டனர்.