மாட்டுவண்டி பந்தயத்தில் 113 ஜோடி மாடுகள் பங்கேற்பு

1பார்த்தது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பனையூர் கிராமத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தயத்தில் பெரியமாடு மற்றும் சிறியமாடு என இரண்டு பிரிவுகளில் மொத்தம் 113 ஜோடி மாட்டுவண்டிகள் பங்கேற்றன. சிவகங்கை, மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பெரியமாடுகளுக்கு 8 மைல் தூரமும், சிறியமாடுகளுக்கு 6 மைல் தூரமும் எல்கையாக நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. வெற்றியாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று கண்டுகளித்தனர்.

தொடர்புடைய செய்தி