காரைக்குடி அருகே பாதரக்குடி நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், பூங்கோதை என்ற பெண்ணின் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து குன்றக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரைக்குடி அருகே பொன் நகரைச் சேர்ந்த பூங்கோதை (45), காரைக்குடியில் இருந்து குன்றக்குடி பாதரக்குடி நெடுஞ்சாலையில் பிள்ளையார்பட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்தத் துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.