காரைக்குடி ரயில் நிலையத்தில் உறவினர் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வந்த திருவாரூர் முத்துப்பேட்டையைச் சேர்ந்த 25 பேர், காரைக்குடியில் 5 ஆட்டோக்களில் சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர், ஒரு ஆட்டோவில் 9 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி டம்ளர்கள் அடங்கிய பையை தவறவிட்டுள்ளார். ஆட்டோ ஓட்டுநர் சிவசூர்யா உடனடியாக காரைக்குடி ஏஎஸ்பி ஆசிஸ் புனியா அலுவலகத்திற்கு நகைப் பையை எடுத்து வந்து உரியவர்களிடம் ஒப்படைத்தார். ஏஎஸ்பி, சிவசூர்யாவிற்கு 500 ரூபாய் வெகுமதி அளித்து பாராட்டினார்.