அரசு மருத்துவமனையில் வாக்குவாதம் காரைக்குடியில் பரபரப்பு

0பார்த்தது
சிவகங்கை மாவட்டம் பாப்பா ஊரணி பகுதியைச் சேர்ந்த காளியப்பன் மகள் துர்காவிற்கு தொண்டையில் சதை வளர்ந்ததால் காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ரத்தப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தைக்கு மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் பிரச்சனை இருப்பதாகக் கூறியதாகக் கூறப்படுகிறது. பின்னர் தனியார் மருத்துவமனையில் மீண்டும் ரத்தப் பரிசோதனை செய்தபோது, சிறுமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என முடிவு வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அரசு மருத்துவமனைக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி