சிவகங்கை மாவட்டத்தில், இளம் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை உறுதிசெய்யும் வகையில், உயர்கல்வி நிறுவனங்களில் நியமிக்கப்பட்டுள்ள வளாக தூதர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நேற்று மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் கா. பொற்கொடி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்த இந்த நிகழ்வில், இளம் வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. அரசு அதிகாரிகள் பலர் இதில் பங்கேற்றனர்.