காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகளுக்கு இடையே நேர ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், குருநாதன் என்ற நடத்துநர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டார். தலையில் பலத்த காயமடைந்த அவரை காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தாக்குதல் நடத்தியவர்களைத் தேடி வருகின்றனர்.