சிவகங்கை மாவட்டம் கீழ உச்சாணி கிராமத்தில் காவேரி கூட்டு குடிநீர் விநியோகத்தில் உப்பு நீர் கலப்பதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட அமைச்சர் டி.கே. பிரபுவிடம், காவேரி கூட்டு குடிநீர் வழங்கல் துறை அதிகாரி, குடிநீரில் உப்பு கலக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். இதனால், பொதுமக்கள் கூறுவது பொய்யா என அமைச்சர் கேள்வி எழுப்பி, அதிகாரியை எச்சரித்தார். மேலும், மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டார்.