கிணற்றில் விழுந்து தத்தளித்த பசுமாடு உயிருடன் மீட்பு

0பார்த்தது
காரைக்குடி அருகே அரியக்குடி சீனிவாசா நகரில் சந்திரன் என்பவருக்குச் சொந்தமான பசுமாடு பாழுங்கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடியது. காணாமல் போன பசுமாட்டைத் தேடியபோது கிணற்றில் விழுந்ததை சந்திரன் கண்டறிந்தார். உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், கயிறு கட்டி கிணற்றில் தத்தளித்த பசுமாட்டை பத்திரமாக மீட்டனர்.

தொடர்புடைய செய்தி