தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (14) மற்றும் நாளை மறுநாள் (15) என இரண்டு நாட்கள் சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நாளை காலை 10 மணிக்கு அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்குகிறார். மாலை 6 மணிக்கு காரைக்குடியில் பெரியார் பெருந்தொண்டர் இரா. சுப்பையாவின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்கிறார். மறுநாள் (15ம் தேதி) சிங்கம்புணரியில் பேரூராட்சி அலுவலகம், அண்ணா மன்றம், மற்றும் சிலைகள் திறப்பு விழாக்களில் பங்கேற்று, 5,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தலைமையில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.